Translate

Friday, 19 June 2020

லியானாடோ டாவின்சி (LEONARDO DA VINCI லியானாடோ டாவின்சி (Leonardo da Vinci) கி. பி 1452 - 1519 காலத்தில் இத்தாலியின் புளோரன்ஸ் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற மறுமலர்ச்சிக்கால ஓவியரும், கட்டிடக்கலைஞரும், பொறியியலாளரும், சிற்பக்கலைஞரும் ஆவார். இவர் ஒரு பல்துறை மேதை (பூரண மனிதர்) என அழைக்கப்பட்டார். குறிப்பாக இவர் சித்திர கலையில் சிறந்த புகழ் மிக்கவராவார் இவரது "இறுதி இராப்போசனம்" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார். உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.

No comments:

Post a Comment

Albert Einstein

Open main menu Search Albert Einstein Language Download PDF Watch Edit "Einstein...